உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பானங்கள்! 

  கண்மணி   | Last Modified : 30 Aug, 2019 05:51 pm
amazing-morning-drinks-to-help-weight-lose

உடல் எடையை குறைக்க நம்மில் பலர் பெரும்பாடு படுகிறோம். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பல வழிகளை முயற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்கிற பதிலையே பல பேர் கூறக் கேட்டிருப்போம். நம்மில் பலரும் இதை உணர்ந்திருப்போம்.

சரி, உடல் எடையை குறைக்க எளிதான சுவையான சில வழியை சொன்னால், அது யாருக்குத்தான் பிடிக்காது.  காலையில் உட்கொள்ளும் உணவுகள் தான் அந்த நாளையே நிர்ணயிக்க போகிறது என பலர் சொல்லக்கேட்டிருப்போம். உண்மைதான், காலையில் நமது நாளை ஆரோக்யமான பானத்துடன் ஆரம்பிக்க என்ன செய்யலாம், எந்த பானத்தை அருந்தலாம் என பார்க்கலாம் ....

எலுமிச்சை மற்றும் சீயா விதைகள்:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை  சாறு, சிறிய அளவு சீயா விதைப் பொடி, சுவைக்காக சிறிதளவு தேன் சேர்த்து காலையில் முதல் பானமாக எடுத்துக்கொள்ளலாம்.  இது உடல் எடையை குறைக்க மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும்.  இந்த பானத்தை பருகுவதனால்  உடலில் தேங்கியுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுவதுடன் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றமும் நிகழும்.

கிரீன் டீ :


காலையில் கிரீன் டீ குடிப்பதனால் பல ஆரோக்ய நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் கிரீன் டீ உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியில் நல்ல பலன் கொடுக்கிறதாம். அதோடு தினமும் கிரீன் டீயை பருகிவந்தால் சருமம் நல்ல பொலிவை பெறும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :


ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள சத்துக்கள் பாக்டிரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. அதோடு ரத்த சர்க்கரை அளவை சரி செய்யவும், இதயத்தை பேணிக்காக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அரை டம்ளர் தண்ணீருடன் ஒரு டேபிள் ஸ்பூன்  ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து நன்றாக கலந்து உடனடியாக அருந்த வேண்டும். இந்த பானம் உடல் எடை குறைய மிக உதவியாக இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக வினிகரை எடுத்துக்கொள்ளக் கூடாது. அதேபோல பானத்தை பருகுவதற்கு ஸ்ட்ரா பயன்படுத்துவதன் மூலம் வினீகர் பற்களை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள முடியும்.

வெள்ளரி பானம்:


 வெள்ளரி பானம்  குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்சத்து கிடைப்பதுன், தேவையற்ற நச்சுக்களும் வெளியேறும். அதோடு உடல் எடை குறைவதற்கும் மிகவும் பயன் தர கூடியதாக இருக்கும். இந்த பானத்தை தயாரிக்க  ஒரு வெள்ளிரி நறுக்கியது, பாதி எலுமிச்சை சாறு, புதினா இலைகள், நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் உடல் எடையை மிக வேகமாக குறைக்க முடியும்.

சீரக தண்ணீர்:


ஒரு ஸ்பூன் சீரகத்தை  ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையிகள் வடிகட்டி அந்த தண்ணீரை குடிக்கலாம்.  இதை பருகுவதனால் உடல் எடை குறைவதுடன், சரியான அளவு மெட்டபாலிசம் சுரக்கவும் வழிவகை செய்யும்.  அதோடு, அதிக பசியை கட்டுப்படுத்தி உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்க உதவியாக இருக்கும். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close