ஆஸ்துமாவை  தூண்டும் காரணிகள் !

  கண்மணி   | Last Modified : 03 Sep, 2019 03:46 pm
factors-that-trigger-asthma

ஆஸ்துமா தாக்குதலின் அறிகுறிகளாக  இருமல், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் போன்றவை  தோன்றும். ஆஸ்துமாவை தூண்டக்கூடிய காரணிகள் சிலவற்றை இங்கே காணலாம்.  இவற்றை புறக்கணிப்பதன் மூலம் ஆபத்தை விளைவிக்க கூடிய ஆஸ்துமா பிரச்னையில் இருந்து தப்பிக்க இயலும்.

புகை: 

சிகரெட் புகைப்பவர்களுக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதோடு புகைப்பிடிப்பவர்களுக்கு அருகாமையில் இருப்பதும் ஆஸ்துமாவை தூண்டக்கூடிய காரணியாக இருக்கிறது.

தூசி: 


சுற்றுப்புறங்களில் உள்ள தூசித் துகள்கள், குளிர்ந்த காற்று, வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், ஈரப்பதம், மழை, விறகு எரியும் பயோமாஸ் புகை, புல் ஆகியவை ஆஸ்துமா தாக்குதலைத் தூண்டும்.

காற்று மாசுபாடு: 

நகர்ப்புற சூழல்களில் ஆஸ்துமாவை வளர்ப்பதற்கான முக்கிய  காரணிகளில் ஒன்றாக காற்று மாசுபடு எ கருதபடுகிறது.  வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, தொழிற்சாலை புகை போன்றவை காற்றில் நச்சு தன்மையை அதிகரித்து ஆஸ்துமாவை தூண்டும் காரணிகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

கரப்பான் பூச்சி:

வீடுகளில் கரப்பான் பூச்சி அல்லது கரப்பான் பூச்சி துகள்கள் இருந்தால்  குழந்தைகளுக்கு மிக வேகமாக ஆஸ்துமாவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சி:

 

உடற்பயிற்சி உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய விஷயமாக இருந்தாலும்.  கடுமையான உடற்பயிற்சி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட 80% பேருக்கு காற்றுப்பாதையை குறுக்கி உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும்  என கூறப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் :


சல்பைட் சேர்க்கைகள், பொதுவாக உணவு பதப்படுத்துதல் அல்லது தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆஸ்துமாவைத் தூண்டும் அபாயம் கொண்டவை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close