நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கான உணவுப்பட்டியல்!

  கண்மணி   | Last Modified : 09 Sep, 2019 11:26 pm
diet-planning-for-diabetes

உடல் உபாதைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் உணவு பழக்கத்தை மாற்றினாலே பல உடல் சார்ந்த பிரச்னைகளை வெல்ல முடியும்.   நீரிழிவு பிரச்னைக்கு ஆளானவர்கள் தங்களது உணவு பட்டியலை பின்வரும் முறையில் அமைத்து கொண்டால் நீரிழிவை தடம் தெரியாமல் போக்கி விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.  நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு  பட்டியலை பார்க்கலாம்....

அதிகாலை:


வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை, உப்பு சேர்த்து  அருந்தலாம்.  இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும்,  இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் , உடலில் சேர்ந்துள்ள  கெட்ட கொழுப்பைக் குறைக்கும் .

காலை உணவு:

காலை உணவில் தானியங்களைத் தவிர்க்கவும். பருப்பை அடிப்படையாகக் கொண்ட காலை உணவை உட்கொள்வது கணையத்தில் கார்போஹைட்ரேட் சுமையை குறைக்க உதவுகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது. 

மதியம் மற்றும் இரவு உணவு:

மதிய உணவு மற்றும் இரவு உணவை ஒரே விகிதத்தில்  எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் சாப்பிடும் தட்டில்  25 சதவீத தானியங்கள், சமைத்த காய்கறி,  பயறு வகைகள்  மற்றும்  சாலட் ஆகியவை இடம் பெற வேண்டும். இந்த உணவு சுமார் 65 முதல் 70 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகள், 10 முதல் 15 சதவீதம் புரதங்கள், 20 முதல் 25 சதவீதம் கொழுப்பு மற்றும்  நார்ச்சத்து ஆகியவற்றை உடலுக்கு வழங்குகிறது.

ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து டீஸ்பூன் (20 முதல் 25 மில்லி) சமையல் எண்ணெயைச் சேர்ப்பது நல்லது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

மாலை சிற்றுண்டி:

மாலை சிற்றுண்டியாக கொட்டைகள் மற்றும் விதைகளை எடுத்துக்கொள்ளலாம் . இவை உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் நார்ச்சத்துக்களை வழங்கும். உதாரணமாக, சூரியகாந்தி விதைகள் , தர்பூசணி விதைகள், பூசணி விதைகள், எள், ஆளிவிதை, பாதாம் , அக்ரூட் பருப்புகள் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை சாப்பிடலாம் . அதேபோல நாவிற்கு மட்டும் ருசி அளிக்கக் கூடிய வறுத்த உணவுகள் , ஜங் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close