இயற்கையாகவே உடலை சுத்தப்படுத்தக்கூடிய அற்புதமான உணவுகள்!

  கண்மணி   | Last Modified : 09 Sep, 2019 11:24 pm
amazing-foods-that-can-cleanse-the-body-naturally

ஜங் புட், மது, சோட கலந்த குளிர்பானம் என ருசிக்கு ஆசைப்பட்டு நாம் உண்ணும் உணவுகளில் பல நமது கல்லீரலை பதம்பார்த்து விடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக செயற்கை உணவுகளால் நமது உடலில் சேரும்  நச்சுத்தன்மையையும், கல்லீரலையையும் சுத்தப்படுத்துவதற்காக இயற்கையே நமக்கு நல்ல வழிகளையும், தீர்வுகளையும் உருவாக்கி கொடுத்துள்ளது அவ்வாறு நமது உடலை இயற்கையான முறையில் சுத்தம் செய்யக்கூடிய அற்புதமான  உணவுகள் குறித்து பார்க்கலாம்... 

எலுமிச்சை:

வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை உடலில்  சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இது உடலின் pH சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது, அதோடு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. காலையில் சூடான நீருடன்  எலுமிச்சை சாறு சேர்த்து பருகுவது  கல்லீரலை பாதுகாக்க கூடிய எளிதான வழியாகும்.

இஞ்சி:

அதிக மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்க கூடியதாக இஞ்சி திகழ்கிறது.  இஞ்சி செரிமானத்திற்கு உதகிறது. அதோடு  வாயுவைக் குறைக்க கூடிய அருமருந்தாகவும் இஞ்சி செயல்படுகிறது.  மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. 

பீட்ரூட்:

மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் பீட்ரூட் தோல், முடி, அதிக கொழுப்பு அளவை குறைப்பதற்கு உதவுகிறது. பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது கல்லீரலை பாதுகாக்கவும், உடலில் சேர்ந்துள்ள நச்சுதன்மையை வெளியேற்றவும் மிகவும் உதவிகரமாக இருக்கும். 

பூண்டு:

ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளை கொண்டது  பூண்டு.  இது வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது, மேலும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

கிரீன் டீ:

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். இது கல்லீரலின் செயல்திறனை அதிகரிப்பதோடு கல்லீரலை நோய்களிலிருந்தும் பாதுகாக்கும்.

முட்டைக்கோஸ்:


முட்டைக்கோஸில்  சல்போராபேன் என்ற ரசாயனம் உள்ளது, இது நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அதோடு  ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளதால் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close