காபி குடித்தால் பித்தப்பை கற்கள் உருவாகாது!

  கண்மணி   | Last Modified : 16 Sep, 2019 10:25 pm
coffee-helps-in-reducing-risk-of-gallstones

காபி பிரியர்களுக்கான ஒரு நற்செய்தி, காபி குடிப்பது பித்தப்பைகற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சமீபத்தில் லண்டன் மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் "அதிக காபி உட்கொள்வது பித்தப்பை நோயிலிருந்து பாதுகாக்கும்" என கண்டறிந்துள்ளனர்.

104,493 நபர்களிடம் நடத்தப்பட்ட  இந்த  ஆய்வு முடிவுகளை ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிட்டுள்ளது . அதன் படி காபி குடிக்கும் நபர்களை, காபி குடிக்காத நபர்களுடன் ஒப்பிடும்போது, ​​பித்தப்பை கற்கள் உருவாக்கும் ஆபத்து 23 சதவீதம் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,  சில மரபணு மாறுபாடுகள் உள்ள நபர்கள் காபியை உட்கொள்ளும் போது பித்தப்பைக் கற்களின் ஆபத்து குறைவாக இருந்தாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close