டெங்குவிற்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டியவை !

  கண்மணி   | Last Modified : 18 Sep, 2019 08:44 pm
things-to-do-before-and-after-dengue

டெங்கு ஒரு உயிர் கொல்லி நோயாக கருதப்படுகிறது. கொசுக்களால் பரவக்கூடிய இந்த நோயிலிருந்து தப்பிக்க எந்தவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து பார்க்கலாம்.... 

முதலில் கொசுக்  கடி மற்றும் பூச்சிக்  கடியிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் பொழுது நீளமான உடைகளை உடல் முழுவதும் கவர் செய்யக்கூடிய உடைகளை அணிவது நல்லது. 

பதிவு செய்யப்பட்ட மற்றும் நன்கு அறியப்பட்ட ஒரு கொசு விரட்டியைப் பயன்படுத்தலாம்.
அதிக கொசுக்கள் உள்ள பகுதியில்  கொசு வலையைப் பயன்படுத்தலாம்.

காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டின்  ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காலை மற்றும் மாலை  வேளைகளில்  நீர் தேங்கியுள்ள  கொசுக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.  

எப்போதெல்லாம்  காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறதோ. அப்போதெல்லாம் கட்டாயம் மருத்துவரை அணுகு வேண்டும். மாறாக  சுய மருந்துகள் எவருக்கும் நிலைமையை மோசமாக்கும்.  மருத்துவருடன் சரியான நேரத்தில் கலந்தாலோசிப்பது நிலைமையை அச்சுறுத்தலாக மாற்றுவதைத் தடுக்க உதவும்.

டெங்கு தாக்குதலிருந்து மீண்ட பிறகு கடைபிடிக்க வேண்டியவை:


டெங்கு தாக்குதலுக்குப் பிறகு மீட்புக்கான பாதை மிகவும் எளிதானது அல்ல. குறிப்பிட்ட உணவு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், குறைந்த அளவு எண்ணெய் மற்றும் காரமான ஒரு உணவை குறைந்தபட்ச காலத்திற்கு கடைபிடிப்பதன் மூலம் பாதிப்பிலிருந்து வெளிவர இயலும். மேலும், ஜீரணிக்க எளிதான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

அசைவ உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது  நல்லது. திரவ உட்கொள்ளலை அதிகரிக்கவும், சாதாரண அல்லது குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான  தண்ணீரை குடிக்க வேண்டும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close