உடல் பருமனை குறைத்த பிறகு தோலில்  ஏற்படும் வரிகளை சரிசெய்ய என்ன செய்யலாம்?

  கண்மணி   | Last Modified : 19 Sep, 2019 11:17 pm
prevent-or-reduce-stretch-marks-after-weight-loss

கர்ப்பம் தவிர, பருவமடைதல், விரைவாக உடல் எடையை குறைத்தல்அதிக  பருமனாக இருப்பது ஆகியவை பெரும்பாலும் வயிறு, மார்பகங்கள், தொடைகள், இடுப்பு மற்றும் மேல் கைகளில் தோலின் மீது நீண்ட கோட்டை  ஏற்படுத்தும்.  கடுமையான ஒவ்வாமை அல்லது தோல் பிரச்சினைகள், ஆஸ்துமா, கீல்வாதம் போன்ற சில பிரச்னைகளுக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக கார்டிகோஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதும் கொடுக்கல ஏற்பட காரணமாக இருக்கின்றனர். 

இவை தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும், இது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. இத்தகைய கோடுகளை மறையச் செய்வதற்கான  சிகிச்சை குறித்து பார்க்கலாம்.


தண்ணீர் குடித்தல்:

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தை மென்மையாகவும், நாள் முழுவதும் நன்கு நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும். காபி போன்ற  பானங்களை உட்கொள்வதை  குறைப்பது நல்லது. ஏனெனில் அவை தோலில் ஏற்படும் வரிகளை ஊக்குவிக்கும் வாய்ப்புகள்  அதிகம்.

சத்தான உணவு

பலவிதமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சீரான உணவை உட்கொள்வது   ஆரோக்யமான சருமத்தை பாதுகாக்க உதவும். உணவில் வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, புரதம், துத்தநாகம் நிறைந்த உணவுகள் உ சரும ஆரோக்யத்தை அதிகரிக்க உதவும்.

வைட்டமின் டி

வைட்டமின் டி போதுமான அளவு  எடுத்துக்கொள்வது தொழில் வரிகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது, வைட்டமின் டி சில உணவுகளில் மற்றும் சூரிய ஒளியில்  உள்ளது.

எடையைக் கட்டுப்படுத்தவும்

ஆரோக்கியமான எடையை பராமரிப்பதுவரிகள் ஏற்படுவதை தடுப்பதற்கான சிறந்த இயற்கை வழிகளில் ஒன்றாகும் - நீங்கள் கர்ப்பமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். விரைவான எடை அதிகரிப்பு காரணமாக உங்கள் சருமத்தில் வரிகள்  உருவாகலாம் என்பதே இதற்குக் காரணம்.

உங்கள் தோல் அதிகமாக அல்லது வேகமாக வளர நிர்பந்திக்கப்படும்போது, ​​கொலாஜன் உற்பத்தி சீர்குலைந்து, வரிகள் ஏற்படும் என்று நெமோர்ஸ் அறக்கட்டளை கூறுகிறது. எனவே, நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியின் மூலம் நிலையான மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது வரிகள் உருவாவதை  தடுக்கும்  சிறந்த வழியாகவும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close