நமது வாழ்க்கை முறையும், உணவு முறையுமே பல உடல் ரீதியான பிரச்னைகளை கொண்டு வருகின்றன. அந்த வகையில், நமது வாழ்க்கை முறையை மாற்றும் பட்ஷத்தில், இதயத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை பார்க்கலாம்...
புகை பிடித்தலை தவிர்த்தல்:
புகை பிடித்தல் அல்லது புகை பிடிப்பவரின் அருகில் இருத்தலால், நுரையீரல் மற்றும் இதயம் வெகுவாக பாதிக்க கூடும். எனவே புகை பிடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
ஆரோக்யமான உணவு முறை:
ஆண்டிஆக்சிடன் நிறைந்த உணவுகளை உட்க்கொள்வது இதயத்தை பாதுகாக்கும். ஆரோக்யமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்க்கொள்வது உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
அளவுக்கு அதிகமான கொழுப்புக்களை தவிர்க்க வேண்டும்:
கொழுப்பு என்பது உடலுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று என்றாலும், அதிக கொழுப்பு இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதிக்கக் கூடும். எனவே அதிக கொழுப்புள்ள உணவுகள், ஜங் புட், துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி :
ஆரோக்யத்துடன் வாழ்வதற்கு உடற்பயிற்சி இன்றியமையாத ஒன்றாகும். அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும்.
newstm.in