ஆரோக்கியமாக உடல் எடையைக் குறைப்பது எப்படி?

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 04:48 pm
secrets-to-be-slim-beauty

அளவுக்கு அதிகமான அளவுகளில் உடல் எடை இருப்பதைத் தான் உடல் பருமன் என்கிறோம். நம் உடம்பில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வது உடல் நலத்துக்கு ஆபத்தானது.  நாளடைவில் இப்படி சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பு, நோயாகவும் மாறக் கூடிய அபாயம் இருக்கிறது. தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகையவர்கள், உடல் எடையை குறைப்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ டயட் என்கிறப் பெயரில் சமயங்களில் சாப்பிடாமல் முழுதாய் பட்டினிக் கிடந்து தவிப்பார்கள். இப்படியெல்லாம் செய்வதால் நிச்சயமாக எந்த விதமான பலனும் கிடைக்காது. நாளடைவில் எரிச்சலும், கோபமும் தான் அதிகரிக்கச் செய்யும்.

உடல் பருமனுக்கான காரணங்கள்:  
அதிகமாக உணவை உட்கொள்ளுதல், தேவையான அளவு உடல் உழைப்பு இல்லாதது, வாழ்முறை, உணவு பழக்க வழக்கங்கள், ஒரே இடத்தில் அமர்ந்த படியே நாள் முழுவதும் வேலைப் பார்ப்பது என்று பல காரணங்களால் உடல்பருமன் ஏற்படுகிறது. 

உடல் எடை அதிகரிப்பதால், மனித உடலில், பல்வேறு விதமான மாற்றங்களுக்கும், நோய்களுக்கும் வழிவகுக்கிறது. தோற்றப் பொலிவையும் இழந்து விடுகிறோம். முக்கியமாக இதன் பலனால் நோய்களும் அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது.

மூச்சுத்திணறல், வலி, மாரடைப்பு, புற்றுநோய், குடலிறக்கம், உறக்கமின்மை, சுவாசத்தில் பிரச்சனை, மலட்டுத்தன்மை என்று தொடரும் நோய்கள் வந்து சேர்கின்றன.

ஆரோக்கியமாக எப்படி எடையைக் குறைக்கலாம்? குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. இரவில் உறங்கும் முன்பு சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்து விட்டு படுத்தால் உடல் எடை குறையும் என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

உடல் எடை இழப்புக்கு சாலட், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதற்கு நல்ல பலன்களைத் தரும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர் பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அதிகரிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் தவிர்ப்பதும் நல்ல பலன்களைத் தரும். அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடை குறைக்க உதவும்.

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை  உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். விறுவிறுப்பாக நடப்பது , நீச்சல் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது, லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது உதவும்.

உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து  பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும். ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக ‘கார்சினியா கம்போஜியா’, ‘கிட்னி பீன்’, விதைகள் போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு மருந்துகளை  எடுத்துக் கொண்டால் எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக, ‘நீரிழிவு’  நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால்  உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும், மெலிதாகவும் வைத்து கொள்ள முடியும்.

டாக்டர்வி. ராமசுந்தரம்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close