நடமாடும் போது மூளையை ஸ்கேன் செய்யும் ஹெல்மெட் வடிவிலான ஸ்கேனர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Mar, 2018 06:10 pm


நடமாடும் போதே மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஸ்கேனரை முதன்முறையாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சிறிய ஹெல்மட்டை போல மூளையை ஸ்கேன் செய்யும் கருவி 3D தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காந்த அதிர்வுகள் மூலம் செயல்படும் இந்த கருவியை பிரிட்டனைச் சேர்ந்த வெல்கம் என்ற தொண்டு நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் மூளை சோதனை செய்ய நோயாளிகள் அசையாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தைகள், வலிப்பு மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. உச்சந்தலையின் மேற்பரப்பில் இதை நேரடியாக வைக்கப்படும் போது நடந்து கொண்டிருந்தாலும் தலையை ஸ்கேன் செய்து விடுகிறது. புதிய ஸ்கேனரானது ஹெல்மட் வடிவத்திலும், எடைக்குறைவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close