• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

வழுக்கையை சரி செய்யும் எலும்பு முறிவு மருந்து: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 03:41 pm

எலும்பு முறிவு நோய்க்கு சிகிச்சையளிக்க தயாரிக்கப்பட்ட மருந்து, வழுக்கை தலையை சரி செய்யும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

அதிகப்படியான எலும்பு முறிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்டது ஆஸ்டியோபோரோசிஸ்(Osteoporosis ) என்னும் மருந்து. இந்த மருந்து பயன்படுத்துவதால் முடியின் வேர்களில் மாற்றம் ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

ஏற்கனவே முடி உதிர்தல் பிரச்னைக்கு மினோக்சிடில்(Minoxidil) மற்றும் பினாஸ்டெரைடு(Finasteride) என்னும் மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுடன் முழுமையான தீர்வையும் கொடுப்பதில்லை. 

இந்நிலையில் ஆஸ்டியோபோரோசிஸ் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மான்செஸ்டர் பல்கலைகழகத்தின் மூத்த விஞ்ஞானி நாதன் ஹவ்க்‌ஷா கூறுகையில், இந்த மருந்து முடி உதிர்தலை சரி செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல. ஆனால் இதனை உட்கொள்ளும் போது முடியின் வேர்களில் நல்ல மாற்றம் ஏற்படுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த மருந்தை உட்கொண்ட 40 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் 6 நாட்கள் இந்த மருந்தை உட்கொண்ட பிறகு அவர்களின் தலையில் முடியின் வேர்களில் மாற்றம் இருந்தது. ஆனால் இந்த மருந்தை முடி உதிர்வதை தடுக்கவும் வழுக்கையை சரி செய்யவும் உட்கொள்வது பாதுகாப்பானதா? என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆய்வுகள் நடத்துவது அவசியம் என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close