குழந்தைகளுக்கு எப்படி உணவை பழக்கலாம் ?

  சாரா   | Last Modified : 24 Jan, 2020 01:35 pm
baby-eating-habits

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில், நமக்கு இருக்கும் சவால் மிகுந்த வேலைகளில் ஒன்று, குழந்தைகளுக்கு சாப்பாடு தருவது தான். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிட்டு விட்டு வந்தார்களா அல்லது கொட்டிவிட்டார்களா என்று கூட தெரியாது. 

                                       

இத்தகைய சவால் மிகுந்த வேலையை பெற்றோர்கள் எவ்வாறு, எப்படி சரி செய்வது என்பதனை பார்ப்போம். 

௦-6 மாதங்கள் : தாய்பால் மட்டுமே தர வேண்டும். இது குழந்தையின் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.

6 - 9மாதம் : தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி, அரிசிக் கஞ்சி செய்து தரலாம். ஒவ்வொரு வேளைக்கும் ஓர் உணவை அறிமுகப்படுத்த வேண்டும். காலையில் இட்லி, பொங்கல், போன்றவை. மதியம் சாதம், பருப்பு, காய்கறிகள், மசித்த கேரட், உருளைக்கிழங்கு, சாம்பார், ரசம், தயிர் சாதம், மோர் சாதம். மாலையில் வேகவைத்த ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா கொடுக்கலாம். 

10வது மாதம் : 9 மாதங்கள் முடிந்தவுடன், முட்டையின் மஞ்சள்கரு கொடுக்கலாம். இந்த உணவுகளை மசித்துக் கொடுக்க வேண்டும். 

1 வயதுக்கு பின்: முட்டையின் வெள்ளைப் பகுதி, பசும்பால் கொடுக்கலாம். 
* பற்கள் முளைக்க ஆரம்பித்ததுமே, அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அவர்களாக எடுத்துச் சாப்பிட பழகி விட வேண்டும். 

குறிப்பு:  பெற்றோர் என்ன செய்கின்றனரோ அதையேதான் பிள்ளைகளும் பின்பற்றுவர். நாம் எந்த மாதிரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சமைக்கிறோம், எதைச் சாப்பிடுகிறோம் என்பதை குழந்தை கவனித்துக்கொண்டு இருக்கும். குழந்தை முன் ‘பீட்ரூட் பிடிக்காது’ என்றால், குழந்தையும் பீட்ரூட்டைத் தவிர்க்க தொடங்கும். எனவே, பெற்றோர் கவனமுடன் செயல்படுவது நல்லது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close