வீடியோ கேம்ஸ் விளையாடுவது தீவிர மன நோய்: உலக சுகாதாரா அமைப்பு தகவல்

  Newstm News Desk   | Last Modified : 19 Jun, 2018 07:27 pm

video-games-addiction-is-mental-disorder-who

கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக வீடியோ கெமம்ஸ் விளையாடுவது மனநோய் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மாறி வரும் வாழ்க்கை முறையில் செல்போன்களும், இணையமும் அன்றாட வாழ்க்கையில் முக்கியமானவையாக மாறிவிட்டன. இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாவும் பல மாற்றங்களை சந்தித்து வருகிறோம்.  குறிப்பாக வீடியோ கேம்ஸ்களின் ஆதிக்கம் உடல் அசைத்து விளையாடும் பழக்கத்தை குறைத்து வருகிறது. இதன் விளைவாக இது ஒரு மனநோயாகவே உருவெடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு திருத்தப்பட்ட நோய் குறியியல் பட்டிலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ச்சியாக வீடியோ கேம்ஸ் விளையாடும் ஆர்வம் ஒரு மனநோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கேமிங் டிஸார்டர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நோய்க்கான அறிகுறிகளாக கேமிங்கில் கட்டுப்பாடு இல்லாதது, மற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் தினசரி வேலைகளை தவிர்த்து விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பது, தொடர்ச்சியாக ஏற்படும் எதிர்மறையான விளைவுகளையும் மீறி விளையாட்டில் ஈடுபடுவது ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளது சுகாதார அமைப்பு.

அறிவியல் பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த கேமிங் டிஸார்டர் என்னும் மனநோய் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் மனவளத்துறை இயக்குனரான சேகர் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வீடியோகேம்ஸில் அதிகபடியான ஆர்வம் காட்டுவதை மனநோயாக குறிப்பிடுவதற்கு சரியாக ஆதாரங்கள் இல்லை எனவும் இது தேவையில்லாத பதட்டத்தை மட்டுமே உண்டாக்கும் எனவும் பல நாடுகளில் இருந்து மனநல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.