பிரியாங்கா சோப்ராவுடன் சிப்லா இணைந்து நடத்தும் ஆஸ்துமா விழிப்புணர்வு பிரச்சாரம்

  Newstm News Desk   | Last Modified : 05 Sep, 2018 11:56 am

berokzindagi-launched-to-urge-effective-management-of-asthma

சிப்லா மருந்து நிறுவனத்துடன் இணைந்து நடிகை பிரியங்கா சோப்ரா ஆஸ்துமா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். 

ஆஸ்துமா பற்றிய விஷிப்புணர்வு இல்லாததால் இந்தியாவில், இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து சிப்லா மருந்து நிறுவனம் இதுகுறித்து விஷிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது அனுபவத்தின் மூலம் இது குறித்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார். 

சென்னையை பொறுத்தபவரை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட 10ல் 7 பேர் சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட சென்னையில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காற்கு மாசு, புகைப்பிடித்தல் போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.

 

#BerokZindagi என்னும் பெயரில் இந்த விழிப்புணர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் ஆஸ்துமா குறித்த பல வதந்திகளையும், பயங்களையும், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நோயாளிகள் மட்டும் அல்லாமல் மருத்துவர்களும் பயன்பெறுவர். Inhalation therapy மீதுள்ள அச்சத்தை கலைத்து அது குறித்து நோயாளிகள் முழுமையாக அறிந்து கொள்ள இந்த பிரச்சாரம் உதவியாக இருக்கும். 

சென்னையில் இந்த பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் நரசிம்மன், "Inhalation Therapy மற்றும் ஆஸ்துமா குறித்து சந்தேகங்களை இந்த விழிப்புணர்வு மூலம் தெளிவுப்படுத்த நல்ல வாய்ப்பு" என்று கூறினார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.