அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் "பருவநிலை அவசர சட்டம்" அமல்!!
இறந்த மானின் வயிற்றில் 7 கிலோ ப்ளாஸ்டிக் - அதிர்ச்சி தகவல் !!!
குண்டுவெடிப்பு வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை
பாரிஸ் : பாலின வன்முறைகளுக்கு எதிராக பேரணி!!!
ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் ரோந்து: இலங்கை அதிபர்
இலங்கையில் அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே தமிழர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும் வகையில் அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தான் : நவம்பர் 29 அன்று அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ள மாணவர்கள்!!
பாகிஸ்தான் : கட்டண உயர்வு, ஊழல்கள் போன்ற விவகாரங்களுக்கு பாகிஸ்தான் அரசு தான் காரணம் என்று கூறி, இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக வரும் 29ஆம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு
இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். கொழும்புவில் உள்ள நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமர் ஆகிறார். பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கபட்டுள்ளார்.
பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார்
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அவர் அனுப்பியுள்ளார்.
நான் அனைத்து மக்களுக்கான அதிபர்: கோத்தபய ராஜபக்சே
‘நான் அனைத்து மக்களுக்கான அதிபர்; எனக்கு தேவை அனைவரின் ஆதரவு தான்’ என்று இலங்கை புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனிய பகுதிகளில் இஸ்ரேலின் குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானவை - ஐ.நா மனித உரிமை அலுவலகம்!!!
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனிய பகுதிகளில், இஸ்ரேல் மேற்கொள்ளவிருப்பது சட்ட விரோதமான செயல் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கூறியுள்ளது.
தமிழ் மக்களுக்கு கோத்தபய ராஜபக்சே அழைப்பு!
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே, இணைந்து செயல்பட வருமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கலிஃபோர்னியா: கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது துப்பாக்கிச்சூடு!
கலிஃபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ அருகே வீட்டின் பின்புறம் அமைந்த புல்வெளியில் அமர்ந்து தொலைக்காட்சியில் கால்பந்து விளையாட்டை கண்டுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மண்ணில் இன்னொரு ராஜபக்சே: சீனாவுக்கு கொண்டாட்டம்?
சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்த ராஜபக்சேவின் சகோதரரே இலங்கையில் அதிபராகவுள்ளது, நமக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த தேர்தல் முடிவு சீனாவிற்கு பெரும் சாதகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
எதிரிகள் மீது தாக்குதல் தொடுப்போம்: காஸா குறித்து எங்கள் கொள்கையில் மாற்றமே இல்லை: பெஞ்சமின் நேதன்யாஹூ!!!!
இஸ்ரேல் நாட்டில் 4 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வரும் காஸா பயங்கரவாதிகள் குறித்த தங்களது கொள்கையில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனவும், அவர்கள் மீது மறுதாக்குதலில் ஈடுபடுவது உறுதி எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ.
பிகினியுடன் வந்தால் இலவச பெட்ரோல்.....ஆனால், நடந்ததோ வேறு....!
ரஷ்யாவில் ஒரு பெட்ரோல் நிலையத்தில், பிகினி அணிந்து வந்தால் இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்ற அறிவிப்பால், ஆண்கள் பிகினி உடை அணிந்து வந்த ருசிகர சம்பவம் நடந்தேறியுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்சே
இலங்கையின் புதிய கோணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று, புதிய அதிபராக பதவியேற்கவுள்ள இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளார் கோத்தபய ராஜபக்சே நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச
இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியை ஒப்புக்கொண்டார்.
லிப்ட் தருவதாக கூறி சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்
மகளை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேஸ்களில் அடைத்த தந்தை!
திரைப்படம் பார்த்து மனைவியை தீர்த்துகட்டினோம்! - காதலியுடன் கணவர் கைது
மாணவிகளை கிண்டல் செய்வையா? - இளைஞரை செருப்பால் அடித்த பெண் காவலர்
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!