டெலிபோன் உரையாடல் கசிவு; டிரம்ப்புக்கு வந்த புதிய சிக்கல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
மெக்ஸிகோ மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய டெலிபோன் உரையாடல்கள் தற்போது கசிந்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கை ஒன்று இந்த தகவல்களை எழுத்து வடிவில் வெளியிட்டுள்ளது. மெக்ஸிகோ அதிபருடன் எல்லைச் சுவர் குறித்தும், ஆஸ்திரேலியா அதிபருடன் அகதிகள் ஒப்பந்தம் குறித்தும் டிரம்ப் பேசிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் கசிவு காரணமாக அமெரிக்க அரசுக்கு புதிய சிக்கல்கள் உருவாகி உள்ளன. மெக்ஸிகோ அதிபர் நேட்டோ உடனான பேச்சு வார்த்தையின் போது டிரம்ப், எல்லைச் சுவர் கட்டுவதற்கு மெக்ஸிகோ நிதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பொது இடங்களில் எல்லைச் சுவர் கட்ட மெக்ஸிகோ நிதி அளிக்காது என நேட்டோ கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் இதே போல் கூறினால், மெக்ஸிகோ தலைவர்களை தான் சந்திக்க மாட்டேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதில் அளித்த நேட்டோ, இது எங்கள் நாட்டின் கவுரவம் மற்றும் பெருமை சார்ந்த பிரச்னையாகும். எல்லை சுவர் கட்ட மெக்ஸிகோ நிதி அளிக்காது என்பதில் நான் உறுதியாக உள்ளேன். வேண்டும் என்றால் பொது இடங்களில் இது குறித்து பேசாமல் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த டெலிபோன் உரையாடலுக்கு பின்னரே டிரம்ப் உடனான சந்திப்பை நேட்டோ ரத்து செய்துள்ளார். இதே போல் ஆஸ்திரேலியா பிரதமர் டர்ன்புல் உடனான பேச்சு வார்த்தையின் போது, ஒபாமா ஆட்சி காலத்தின் போது போடப்பட்ட அகதிகள் ஒப்பந்தம் குறித்து காரசாரமாக டிரம்ப் விவாதித்துள்ளார். இந்த உரையாடலின் போது டிரம்ப், இது என்னை கொல்லப் போகிறது. இந்த உலகின் சிறந்த மனிதனாகிய நான், மற்ற மக்களை என் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என கூறினேன். தற்போது நானே 2,000 பேரை என் நாட்டிற்குள் அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார். ஆனால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி டிரம்ப் நடந்து கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியா பிரதமர் திட்டவட்டமாக கூறிவிட்டார். டர்ன்புல் உடனான உரையாடலை மிகவும் மோசமான உரையாடல் என டிரம்ப் விமர்சித்திருந்தது உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற ஜனவரி மாதத்தில் நடந்தவையாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close