தொலைந்து மோதிரம் கேரட்டில் வந்தது; கனடா நாட்டில் ஓர் ஆச்சர்யம்!!

  jvp   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
"மோதிரம் எத்தனை கேரட்டில் செஞ்சது?" என்கின்ற கேள்வியைக் கேட்டிருப்போம். ஆனா கேரட்டுக்குள்ளேயே மோதிரம் இருந்து பார்த்திருக்கீங்களா மக்களே? கனடாவுல அப்டி ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதுவும் அதுக்குப் பின்னாடி பார்த்தா நெகிழ்ச்சியான இன்னொரு சம்பவமும் நடந்துருக்கு. கனடாவின் அல்பேர்டா நகரில் மேரி கிராம்ஸ் என்னும் 84 வயது மூதாட்டி, கடந்த 2004-ம் ஆண்டு, தனது வீட்டுக் காய்கறி தோட்டத்தில் தனது நிச்சயதார்த்த மோதிரத்தினைத் தொலைத்திருக்கிறார். இப்போது எதார்த்தமாக அவரது மருமகள் தோட்டத்தில் எடுத்த ஒரு கேரட்டின் நடுப்பகுதியில் ஓர் மோதிரம் சிக்கி இருந்ததைக் கண்டுபிடித்துக்கூறியுள்ளார். பிறகுதான் அது மேரி கிராம்ஸின் தொலைந்துபோன நிச்சயதார்த்த மோதிரம் என்று தெரியவந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்த மோதிரம் கேரட் வளரும்போது அதனுள் சிக்கி சேர்ந்து வளர்ந்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்புதான் அவருடைய கணவர் இறந்ததாகவும், தொலைந்துபோன அந்த மோதிரம் கிடைத்ததை அவர் இப்போது பார்த்திருந்தால் மகிழ்ந்திருப்பார் என்றும் மனம் நெகிழ்ந்திருக்கிறார் அந்த மூதாட்டி. ஜெர்மன் நாட்டிலும் இதேபோல் மோதிரம் தொலைந்து பிறகு எடுக்கப்பட்ட சம்பவமும் 2016ல் நடந்திருக்கிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close