• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

கணவனுக்கு முன்னால் நடந்து சென்றதால் மனைவிக்கு விவாகரத்து

Last Modified : 22 Aug, 2017 09:21 pm

சவூதிஅரேபியாவில்,நடந்து செல்லும் போது தன் சொல்லைக் கேட்காமல் தனக்கு முன்னால் சென்ற தனது மனைவியை ஒருவர் விவாகரத்து செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவூதிஅரேபியாவில் சின்னச்சின்னக்காரணங்களுக்காக விவாகரத்து வழங்கும் நிகழ்வு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வீதியில் நடந்து செல்லும் போது தன் சொல்லைக் கேட்காமல் தனக்கு முன்னால் சென்றதாகக் கூறி மனைவியை ஒருவர் விவாகரத்து செய்தள்ளார். கணவன் மனைவி இருவரும் வீதியில் நடந்து சென்றுள்ளனர். இதன் போது மனைவி கணவனுக்கு சற்று முன்னால் நடந்து சென்றுள்ளார். தனக்கு முன்னால் செல்ல வேண்டாமென மனைவியிடம் குறித்த கணவன் பல முறை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கோபம் அடைந்த கணவன் தன் மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளார். இதே போல் பல சம்பவங்கள் சவூதிஆரேபியாவில் நிகழ்வதாக கூறப்படுகிறது. இரவு உணவு நேரத்தின் போது ஆட்டின் தலையை பரிமாறாததுக்காக ஒருவர் மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளார். மற்றொரு சம்பவத்தில் காலில் கொலுசு அணிந்ததற்காக விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சின்னச்சின்னக் காரணங்களுக்காக சவூதி அரேபியாவில் நிகழும் விவாகரத்துக்களால் அந்நாட்டுப்பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து சமூக ஆர்வலர் லத்தீஃபா ஹமீத் கூறுகையில் ,இளைய சமூகத்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இதுசார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
[X] Close