• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

சிரியா : அமெரிக்கா வான்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 42 பேர் பலி

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகளின் பதுங்கு இடங்களின் மீது அமெரிக்க வான்படை தலைமையில் இரு நாட்டு போர் விமானங்களும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளை காட்டிலும் அப்பாவி பொதுமக்கள் அதிக அளவில் பலியாகி உள்ளனர். இன்று ராஃகா நகரில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 42 பேர் கொல்லப்பட்டனர். இதில் 19 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் அடங்குவர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் யாரேனும் பலியாகினரா என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை. கடந்த 14-ஆம் தேதியில் இருந்து இதுவரை நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் 167 உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி துவங்கிய 2011-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு தீவிரவாத மற்றும் ராணுவ தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close