• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

வெள்ளை மாளிகை அருகே கிடந்த மர்ம பையால் பரபரப்பு

Last Modified : 23 Aug, 2017 11:42 am

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பான வெள்ளை மாளிகை அருகே நேற்று கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உலகின் அதிக பாதுகாப்பு நிறைந்த இடங்களில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் ஒன்று. 24 மணி நேரமும் இங்கு பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருப்பர். ஆனால் அவ்வப்போது அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்த சம்பவமும் நடந்ததுண்டு. அந்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 1:15 மணி அளவில் வெள்ளை மாளிகையின் வடக்கு மதில் அருகே மர்ம பை ஒன்று கிடப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இது குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் உள்ளூர் போலீசாருடன் ரகசிய புலனாய்வு பிரிவினர் அங்கு வந்தனர். இதனிடையே அந்த பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் நடைபெற்ற சோதனையில் அந்த பையில் சந்தேகிக்கும் வகையில் எந்த பொருளும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இந்தப்பை அங்கு எப்படி வந்தது என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவத்தின் போது அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை.

Advertisement:
[X] Close