ஹாங்காங் நகரை தாக்கியது ஹாடோ புயல்

Last Modified : 23 Aug, 2017 12:39 pm

சீனாவின் ஹாங்காங் நகரை ஹாடோ புயல் இன்று தாக்கியது. மணிக்கு 155 கிமீ வேகத்தில் தாக்கிய புயல் காற்றின் காரணமாக வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. பலத்த காற்று வீசி வருவதால் கடற்கரை பகுதிகளில் 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஹாங்காங் பங்குச் சந்தை இன்று தாமதமாகவே ஆரம்பித்தது. புயலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் பங்கு வர்த்தகம் இன்று முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தற்போது வரை தெரியவில்லை.

Advertisement:
[X] Close