இரு துருவங்களும் சிங்கப்பூர் தீவில் சந்திக்க முடிவு!

  Padmapriya   | Last Modified : 06 Jun, 2018 10:30 am
luxury-resort-named-as-donald-trump-kim-jong-un-summit-venue

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் சிங்கப்பூரில் சந்திக்கும் இடம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருவரும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நேற்று இவர்கள் சந்தித்து பேசுவதற்கான நேரத்தை அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். வரும் 12-ம் தேதி காலை 9 மணிக்கு சந்திப்பு நடக்க உள்ளதாக கூறினார். 

இந்த நிலையில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சிங்கப்பூரில் சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஹோட்டலில் கிம் ஜாங்க் உன், ட்ரம்ப் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்றார்.

சுற்றுலாவுக்கு மிகவும் பெயர் போன சென்ட்டோசா தீவில்  கேபெல்லாவில் இந்த உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு. தனித் தீவின் ஓரத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பதால், தேவையில்லாத நபர்களை தவிர்க்க முடியும் அதுவும் இரு அதிபர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க மிகச் சிறந்த இடமாக இதுவே இருக்கும். 

உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இருநாடுகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், உலக மக்கள் மட்டுமின்றி, அந்த இரு நாட்டு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த அமைதி தொடருமா, இல்லையா என்பது பேச்சுவார்த்தைக்குப் பிறகே தெரியவரும்.

தொடர்புடையவை:

ட்ரம்ப் மன மாற்றத்துக்கு அந்தக் கடிதம் தான் காரணமா?

கிம் ஆட்சியில் வட கொரியா செல்லும் முதல் வெளிநாட்டு அதிபர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close