தடைகளை நீக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்: வடகொரிய ஊடகங்கள்

  shriram   | Last Modified : 14 Jun, 2018 04:40 am
trump-agreed-to-remove-sanctions-north-korea

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பில், வடகொரியா மீதுள்ள பொருளாதார தடைகளை நீக்க ட்ரம்ப் உறுதியளித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய தரப்பில் அணு ஆயுதங்களை விட்டுக்கொப்பது பற்றி எந்த உறுதியான திட்டத்திற்கும் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், தடைகளை நீக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கிம் ஜோங் உன்னை கடுமையாக விமர்சித்து வந்த ட்ரம்ப், அணு ஆயுதங்களை விட்டுக் கொடுக்க வைக்க இந்த சந்திப்புக்கு ஒப்புக்கொண்டார். சிங்கப்பூரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்கு முன்னரே இரு தரப்பினரும் முன்னுக்கு பின் முரணாக பேசி வந்தனர். கிம் அணு ஆயுதங்களை விட்டுக் கொடுத்தால் மட்டுமே வடகொரியா மீதுள்ள பொருளாதார தடைகளை நீக்கவும், கொரிய தீபகற்பத்திலும் நடத்தி வரும் ராணுவ பயிற்சிகளை நிறுத்தவும் முன்வருவோம் என அமெரிக்கா திட்டவட்டமாக கூறி வந்தது.  அதேபோல, அமெரிக்கா ராணுவ பயிற்சிகளை நிறுத்தினால் மட்டுமே, அணு ஆயுதங்களை விட்டுக் கொடுப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படுமென வடகொரியா கூறியது. 

இந்நிலையில்,  பேச்சுவார்த்தைக்கு பின், அதிபர் ட்ரம்ப், கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ பயிற்சிகள் நிறுத்தப்படும் என செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், பொருளாதார தடைகளையும் நீக்க கிம்மிடம் ட்ரம்ப் உறுதியளித்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இது அமெரிக்க எதிர்க்கட்சி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close