சவுதியில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடை நீக்கம்

  Padmapriya   | Last Modified : 24 Jun, 2018 01:14 pm
landmark-day-for-saudi-women-as-kingdom-s-controversial-driving-ban-ends

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.  இது குறிப்பிடத்தகுந்த உத்தரவாகவும் அந்நாட்டு பெண்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.  

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டவிதிகள் கடை பிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை  சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து இன்று முதல் பெண்கள் கார் ஓட்ட துவங்கியுள்ளனர். அந்நாட்டின் பெண்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது.

மன்னர் சல்மானின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சவுதி அரேபியாவில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அங்கு இதுவரை விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி இல்லை. தலைநகர் ரியாத்தில் தேசிய தின கொண்டாட்டத்தின் போது நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கார் ஓட்டவும் இவரது ஆட்சி அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இருப்பினும் பின் சல்மான் அடிப்பைவாதிகளால் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். பாரம்பரியத்தை அவர் நாசம் செய்வதாக பயங்கரவாத குழுக்களும் அவருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close