தாய்லாந்து: 16 நாட்களுக்கு பிறகு மூழ்கிய குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு!

  Padmapriya   | Last Modified : 08 Jul, 2018 08:39 pm
thai-cave-rescue-first-boys-freed-by-rescue-divers-officials-say

தாய்லாந்து மலை குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களில் முதற்கட்டமாக 4 பேரை மீட்டதாக உறுது செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் இந்த மீட்பு முயற்சியில் முதல் வெற்றி கிட்டியுள்ளது 

தாய்லாந்தில் மா சே நகரில் தாம் லுவாங் குகையில் சுமார் 10 கி.மீ. நீளம் கொண்ட குகைக்குள் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிர்ச்சியாளர்களில் முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்கப்பட்டதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட சிறுவர்கள் உடனடியாக உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

சாத்தியமான மீட்பு முயற்சி: 

மழை வெள்ளம் காரணமாக குகைக்குள் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் முயற்சியாக, மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணிக்கு மீட்பு குழுவினர் குகைக்குள் நுழைந்தனர்.

இன்று காலை, அவசியம் அல்லாத ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முக்குளிப்பவர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் மட்டுமே அந்த இடத்தை சுற்றிலும் நிறுத்தப்பட்டனர். 

வெளிநாட்டை சேர்ந்த 13 முக்குளிப்பவர்கள் மற்றும் தாய்லாந்து கடற்படையை சேர்ந்த 5 முக்குளிப்பவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீர்மட்டம் உயர்ந்தது: 

கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் குகைக்குள் சிக்கினார்கள். குகையில் அவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டு வந்தனர். 

ஆபத்தான முயற்சி: 

இதுகுறித்து மீட்புக் குழுவின் தலைவர் நரோங்சக் ஓசோடானங்கார்ன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குகைப்பாதை வழியாக அழைத்து வருவது மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
எனவே, அவர்கள் இருக்கும் இடத்தை அடைவதற்கான மாற்றுப் பாதைகளை உருவாக்கும் வகையில், மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டன. 

முழுமையான பின்னணி:

குகைக்குள் தவிக்கும் சிறுவர்கள்: மீட்க சில மாதங்கள் ஆகும் என்கிறது தாய்லாந்து ராணுவம் 

தாய்லாந்து: தாமாக முன்வந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close