புடினுடனான சந்திப்பு: ட்ரம்ப்-ஐ நூடுல்ஸ் என கலாய்த்த அர்னால்டு

  Padmapriya   | Last Modified : 18 Jul, 2018 03:28 pm
arnold-schwarzenegger-blasts-trump-during-putin-presser

ரஷ்ய அதிபர் புடினுடனான சந்திப்பில் சிறிய நனைந்த நூடுல்ஸ் போல ட்ரம்ப் காணப்பட்டதாகவும் அமெரிக்காவை விற்றுவிட்டு அவர் வந்திருப்பதாகவும் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா முன்னாள் ஆளுநருமான அர்னால்டு விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச விரும்புவதாக சில மாதங்கள் முன்பு ரஷ்ய அதிபர் புடின் விருப்பம் தெரிவித்து இருந்தார். ட்ரம்ப் உடன் வட கொரிய அதிபர் கிம் ஜாங் மேற்கொண்ட சந்திப்பை அடுத்து இந்த முடிவு ஏற்பட்டது.  இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ட்ரம்ப், பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் அந்நாட்டு அதிபர் மாளிகையில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து பேசினார். 

இரு தலைவர்களும் முதன் முதலாக நேருக்கு நேர் சந்தித்து பேசினர். அதுவும் இந்த சந்திப்பு தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் பங்கேற்காமல் நடந்தது. 

அப்போது ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். மேலும், உலககோப்பை கால்பந்து போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக புடினை டிரம்ப் பாராட்டினார்.

இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரம் கலிபோர்னியா ஆளுநருமான அர்னால்டு ஸ்க்வார்ஜெனிகர் தனது இன்ஸ்டாகிராமில் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "ட்ரம்ப் அவர்களே. புடினுடனான உங்களது செய்தியாளர் சந்திப்பை நான் கண்டேன்.  அது என்னை சங்கடப்படுத்தும் வகையில் இருந்தது.

நீங்கள் ஒரு சிறிய நனைந்த நூடுல்ஸ் போன்று, ஒரு சின்னஞ்சிறு சிறுவன் ஹீரோவை பிரமித்து பார்ப்பதை போல் நின்று கொண்டு இருந்தீர்கள். புடினிடம் ஒரு ஆட்டோகிராப் அல்லது ஒரு செல்பி எடுத்து கொள்ள கேட்பதற்காக சென்றவர் போல தான் நீங்கள் காணப்பட்டீர்கள். இந்த செய்தியாளர் சந்திப்பில் நமது சமூகம், நீதி அமைப்பு மற்றும் நமது நாட்டையே விற்று விட்டு தான் வந்துள்ளீர்" என கூறியுள்ளார்.

அர்னால்டு தவிர்த்து அமெரிக்க அவை சபாநாயகர் பால் ரையான், செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம், செனட் உறுப்பினர் ஜான் மெக்கெய்ன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல்வாதிகள் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி சேனலின் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆகியோரும் ட்ரம்பின் புடினுடான சந்திப்பை விமர்சித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close