ஏமன் : கார் குண்டு தாக்குதலில் 6 பேர் பலி

Last Modified : 06 Jul, 2016 11:49 am
ஏமன் நாட்டில் இன்று நடந்த கார் வெடி குண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகினர். தெற்கு ஏமனின் ஏதேன் நகரில், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ தளவாடத்தில் நடந்த இரட்டை கார் வெடி குண்டு தாக்குதலில் இராணுவத்தினர் 6 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜிஹாதிகளே காரணம் என இராணுவ தரப்பில் கூறப்படுகிறது. கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தளவாடத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் பலர் காயமடைந்தனர். இறுதியில் இராணுவத்தினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close