வங்கதேசம்: ரமலான் தொழுகையில் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி

Last Modified : 07 Jul, 2016 11:31 am
வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவுக்கு அருகில் உள்ள கிஷோர்கஞ்ச் எனும் இடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 4 பேர் பலியாகினர். இன்று காலை ரமலான் தொழுகைக்காக ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அங்குள்ள பள்ளிக் கூட மைதானம் ஒன்றில் கூடியிருந்தனர். அப்பொழுது நடந்த குண்டு வெடிப்பில் ஒரு காவலர் உட்பட 4 பேர் பலியாகினர், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப் பேற்கவில்லை. குண்டு வெடிப்பை தொடர்ந்து அங்கு துப்பாக்கி சூடு நடந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close