லயன் ஏர் விமானத்தின் 2ஆவது கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Nov, 2018 03:19 pm
lion-air-s-black-box-still-searching

கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்ட ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், இரண்டாவது கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

ஜகர்த்தாவில் இருந்து பான்கால் பியாங் என்ற நகரை நோக்கி, 189 பேருடன், கடந்த 29ஆம் தேதி லயன் ஏர் போயிங் சென்றது. விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர். கடலில் மிதந்த விமான பாகங்களையும், கருப்பு பெட்டியையும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, விமானிகளுக்கு இடையிலான உரையாடல்கள் அடங்கிய மற்றொரு கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சேகரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close