இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 08:41 am
eagreeing-to-call-an-election-might-be-the-best-optiono-rajapaksa

நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் வெற்றி கிடைக்காவிட்டால் இலங்கையில் தேர்தலை நடத்த ராஜபக்சே திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்நாட்டின் நாடாளுமன்றம் 14-ஆம் தேதி கூட உள்ளது. அந்த கூட்டத்தில் ரணிலும், ராஜபக்சேவும் தங்களின் பலத்தை நிரூபிக்க உள்ளனர். இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பிக்களுக்கு 50 கோடி ரூபாயும், அமைச்சர் பதவியும் தருவதாக ராஜபக்சே பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே ராஜபக்சே தனது ஆதரவாளர்களை கொழும்பு நகரில் குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கவும் ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை தேர்தல் அதிகாரி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close