எச்-1பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்காவில், பல்வேறு நாட்டினர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்தியர்களும் அதிகளவில் அங்கு பணிபுரிந்து வரும் நிலையில், டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அதில் சில கிடுக்கிப்பிடி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வெளிநாட்டினர்அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு 'எச்-1 பி' விசாக்களை அந்நாடு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 65,000 'எச்-1பி' விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுவதில் ஒவ்வொரு வருடமும் போட்டி நிலவுகிறது.
இப்போது இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
அதாவது அதிதிறமை உள்ளவர்கள் மற்றும் அதிக சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டும் அவ்வாறு முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் அமெரிக்க செல்லும் இந்தியர்கள் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
newstm.in