அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற்ற நாய்!

  Newstm Desk   | Last Modified : 20 Dec, 2018 12:58 pm
service-dog-griffin-gets-an-honorary-diploma-from-clarkson-university

அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரின் பட்டப்படிப்புக்கு உதவிய நாய்க்கு கிளார்க்ஸன் பல்கலைகழகம் கவுரவ பட்டம் வழங்கி உள்ளது. 

அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் உள்ள கிளார்க்ஸ்ன் பல்கலைக்கழகத்தில் ஆக்குபேஷனல் தெரபி பிரிவில் பிரிட்னி ஹாலே முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அந்த பெண்ணுக்கு முதுகுத்தண்டு வடப்பிரச்னை இருப்பதால், அவரால் நடக்க முடியாது. 

எனவே, கிரிஃபின் என்று பெயரிட்டு அப்பெண் வளர்த்த நாய்க்கு பல்வேறு கட்டளைகளைச் சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார். அதன்படி காலை நேரத்தில் பிரிட்னியின் சக்கர நாற்காலியை தள்ளிச் செல்லுதல், வீட்டு வாயில் கதவைத் திறந்துவிடுதல் என அனைத்து பணிகளையும் கிரிஃபின் செய்து வந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் அந்த பெண்ணுடன் பல்கலைகழகத்திற்கு சென்று வந்துள்ளது. 

அந்த நாயின் பணிகளை பாராட்டும் வகையில் நியூயார்க்கில் உள்ள பாட்ஸ்டாம் அறக்கட்டளை சார்பில் கிரிஃபினுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைத்தது. இதனையடுத்து கிளார்க்ஸன் பல்கலைகழகம் கிரிஃபினுக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close