ஜப்பான் நடத்தவிருக்கும் திமிங்கல வேட்டை: எதிர்க்கும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்

  Newstm Desk   | Last Modified : 27 Dec, 2018 09:01 am
japan-quits-global-whaling-body-will-resume-commercial-hunt

ஜப்பானில் வணிக ரீதியான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என்று ஜப்பான் அரசு  அறிவித்துள்ளது. இதற்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பான் மக்கள் மத்தியில் திமிங்கல இறைச்சி மீதான விருப்பம் அதிகரித்தது. ஆனால் சமீப காலமாக திமிங்கல இறைச்சியை சாப்பிடுவது அங்கு குறைந்தது. ஆராய்ச்சிக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுகிறது என்று ஜப்பானில் இறைச்சி விற்பனை நடந்து வந்தது. இதனை பலரும் விமர்சித்து வந்தனர்.  

இந்த நிலையில் ஜப்பானில் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை வரும் ஜூலை மாதம் தொடங்கப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஐ.டபிள்யு.சி. என்று அழைக்கப்படுகிற சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து ஜப்பான் விலகுகிறது. இந்த அமைப்பு, திமிங்கல வேட்டைக்கு 1986ம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது.

1951ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் ஜப்பான் உறுப்பினராக இருந்து வருவதால் வணிக ரீதியிலான திமிங்கல வேட்டை கூடாது என்ற விதிமுறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை இருந்தது. இப்போது வணிக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு ஜப்பான் அனுமதி அளிக்கிற காரணத்தால், சர்வதேச திமிங்கல ஆணையத்தில் இருந்து விலகி விட உள்ளது.

திமிங்கல இறைச்சி சாப்பிடுவது ஜப்பான் கலாசாரம்தான் என்று ஜப்பான் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் வணிக ரீதியில் திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளித்தால் அது கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என பாதுகாப்பு குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close