சவுதியில் இருந்து தப்பிய இளம்பெண் கனடாவில் தஞ்சம்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 02:56 pm

saudi-girl-lands-in-canada-after-getting-asylum

விருப்பமில்லாமல் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முயற்சித்ததை தொடர்ந்து, சவுதி அரேபியா நாட்டை விட்டு தப்பி பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண், கனடாவில் தஞ்சம் கிடைத்ததை தொடர்ந்து, அந்நாட்டின் டொரண்டோ நகருக்கு வந்தடைந்துள்ளார்.

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ரஃகப் அல்-கனான்  என்ற 18 வயது இளம்பெண், தனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முயற்சித்ததை தொடர்ந்து, அங்கிருந்து தப்பி தாய்லாந்து வந்தார். ஆஸ்டர்லிங் செல்ல முயற்சித்த அவரை, தாய்லாந்து அதிகாரிகள் திருப்பி சவுதிக்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். தனது நிலையை, சமூக வலைதளங்களில் கூறி உதவி கேட்டார் அல்-கனன்.

மீண்டும் சவுதிக்கு சென்றால், தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறிய அவருக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது. ஆஸ்திரேலியா, கனடாவில் ஆகிய நாடுகளில் அல்-கனன் தஞ்சம் கோரினார். ஐநா-வால் அகதியாக அங்கீகரிக்கப்பட்ட அவருக்கு, கனடாவில் அவருக்கு தஞ்சம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, தாய்லாந்தில் இருந்து அவரை கனடா நாட்டின் டொரோண்டோ நகருக்கு வந்தார். கனடா என்ற டிஷர்ட் அணிந்து விமான நிலையத்தில் தரையிறங்கிய போது கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலேன்ட் அவரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம், அல்-கனனை புதிய கனடா பெண் என அறிமுகம் செய்து வைத்தார். "ஒருவரை, ஒரு பெண்ணை நம்மால் காப்பாற்ற முடிந்தால், அது நல்ல விஷயம் தான்" என்று ப்ரீலேன்ட் கூறினார். 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.