வழக்கத்தை மாற்றிய 2016ம் ஆண்டு அமெரிக்க தேர்தல் மீம்கள்: ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 02:05 pm
facebook-memes-in-2016-us-presidential-polls-had-no-gender-stereotypes

வழக்கமாக பெண்கள் என்றால் அவர்களின் அழகு குறித்தும், ஆண்கள் என்றால் அவர்களது கொள்கை குறித்தும் கிண்டல் செய்யும் வழக்கங்களை சமூகவலைதளங்களில் அதிகம் பயன்பட்டுவரும் மீம் பேஜ்கள் 2016 அமெரிக்க தேர்தலில் மாற்றி உள்ளன. 

2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சிகளின் பிரச்சாரத்தையும் தாண்டி சமூக  வலைதளங்கள் பெரும் பங்காற்றின. இனி வரும் தேர்தல்களில் சமூக வலைதளங்களின் தாக்கங்கள் குறித்த முன்னோட்டமாக இவை கருதப்படுகின்றன. 

இந்நிலையில் தேர்தலின் போது மீம் பேஜ்களின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடந்துள்ளது. அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் Social Media + Society என்ற பெயரில் வெளியாகி உள்ளன. 

இதில் பாலின ரீதியாக ஒருவரை கிண்டல் செய்வதில் மீம் பேஜ்கள் வழக்கத்தை மாற்றி உள்ளன. இந்த ஆய்வில் மொத்தமாக 106 பேஜ்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இவை டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹில்லாரி கிளின்டன் ஆகியோர் பற்றிய மீம்ஸ்களை வெளியிடும் பேஜ்கள். 

ஆய்வின் முடிவில் டிரம்ப் அதிகமாக அவரது உடல்மொழி, முடியின் நிறம், தோல் நிறம் ஆகியவற்றை கொண்டு தான் கிண்டல் செய்யப்பட்டுள்ளார். இதே நேரத்தில் ஹில்லாரி கிளிண்டன் பற்றிய மீம்கள் இமெயில் விவகாரம், அவரது கொள்கைள் பற்றியதாக இருந்துள்ளன. இது மக்களிடையே இருந்து வந்த நீண்ட கால வழக்கமான, பெண்கள் என்றால் அவர்களின் அழகு குறித்தும், ஆண்கள் என்றால் அவர்களது கொள்கை குறித்தும் கிண்டல் செய்யும் போக்கை  மாற்றி உள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close