துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 12:17 pm
bangladesh-team-narrowly-escapes-new-zealand-mosque-shooting

நியூசிலாந்தில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதியில் நடைப்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர்தப்பி உள்ளனர். அந்த அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றிப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலைியல் இன்று காலை அந்நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் தூப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. 30-40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளார். 

மசூதிக்குள் நுழைந்த அந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 9க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயமும் உள்ளதாகவும் நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த வங்கதேச கிரிக்கெட் அணியினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்துள்ளதாக வங்கதேசம் கிரிக்கெட் வீரர் முகமது இசாம் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் , இது குறித்து, வங்கதேசம் அணி முழுவதுமாக துப்பாக்கிச் சூடு நடந்த ஹாக்லே பார்க்கில் இருந்து  ஓவல் என்ற இடத்திற்கு ஓடி தப்பித்து உயிர்பிழைத்ததாகவும் தற்போது பாதுகாப்பாக உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரனை நடைபெற்று வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close