துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் லைவ்வானது எப்படி: கேள்வி எழுப்பும் நியூசிலாந்து பிரதமர்

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 02:49 pm
pm-jacinda-ardern-wants-answers-from-fb-after-livestream-of-nz-shooting

நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் பேஸ்புக்கில் லைவ் ஆனது குறித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பேஸ்புக்கிடம் கேள்வி எழுப்பி உள்ளார். 

கடந்த வெள்ளியன்று நியூசிலாந்தில் உள்ள மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 50 பேர் பலியாகினர். 48பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலை  நடத்திய தீவிரவாதி பிரென்டன் டரேன்ட் அதனை பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீம் செய்து வெளியிட்டார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவன அதிகாரிகள், இதனை தடுக்காமல் என்ன செய்தனர் என்று நியூசிலாந்து பிரதமர் ஜேசிண்டா கேள்வி எழுப்பி உள்ளார். 

நியூசிலாந்தின் பேஸ்புக் அதிகாரி மியா கார்லிக் இதுகுறித்து பேசும் போது, "சம்பவம் நடந்த முதல் 24 மணி நேரத்தில், 1.5 மில்லியன் வீடியோக்களை உலகளவில் டெலிட் செய்துள்ளோம். 1.2 மில்லியன் வீடியோக்களை பதிவேற்றம் ஆகாமல் தடுத்துள்ளோம்" என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close