மியான்மரில் கோலாகலமாக தொடங்கிய தண்ணீர் திருவிழா

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 02:00 pm
traditional-water-festival-kicks-off-across-myanmar

மியான்மரில் வருடந்தோறும் நடக்கும் திங்யான் எனும் தண்ணீர் திருவிழா, மிகவும் கோலாகலமாக தொடங்கி உள்ளது. 

பர்மிய புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் இவ்விழா, பர்மிய நாள்காட்டியில் மிகவும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

அந்த வகையில் மிகவும் உற்சாகமாக தொடங்கிய இந்த விழாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர். 

மேலும் பாரம்பரிய உடைகளை அணிந்த பெண்கள், நடனங்களை ஆடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close