நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு!

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2019 02:50 pm
sri-lankan-government-apologises-for-failure-to-act-on-intelligence-tip-off

இலங்கையில் தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறை எச்சரித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காததற்கு இலங்கை அரசு, அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று முன்தினம்(ஏப்.21) காலை, இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 6 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகல் சமயத்தில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடித்தது. 

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில், பலி எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில்,  மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 10 பேர்  இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர் குண்டுவெடிப்பையடுத்து, இலங்கை தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

முன்னதாக, இலங்கையில் சர்வதேச அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்தலாம் என அந்நாட்டு அரசுக்கு, இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, உளவுத்துறை எச்சரித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காததற்கு இலங்கை அரசு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்ன இது தொடர்பாக பேசும் போது, " இந்திய உளவுத்துறை, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது உண்மை தான். அரசு தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. 

இலங்கை மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர அரசு அனைத்து  முயற்சிகளும் எடுக்கும்" என்று ரஜிதா சேனரத்ன கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close