இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை செய்த பாகிஸ்தான்!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2019 09:07 am
pak-iftar-insult-indian-diplomats-harassed-by-pakistani-officials-while-hosting-iftar-guests-manhandled

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர்.

ரம்ஜான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இப்தார் விருந்தில் கலந்துகொண்டனர்.  அப்போது திடீரென பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் உள்நுழைந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் விருந்தில் பங்கேற்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.  இதையடுத்து இந்திய தூதரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் புலனாய்வு அதிகரிகள் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close