ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 26 Aug, 2019 08:46 pm
taliban-commander-among-8-killed-in-afghanistan

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகளின் மீது அந்நாட்டு ராணுவப்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி அவர்கள் வசம் உள்ள இடங்களை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இதற்கிடையே, பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எனவே, இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் பொருட்டு, அந்நாட்டு ராணுவம் அமெரிக்கக் கூட்டுப்படை உதவியுடன் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில், தீவிரவாத அமைப்பு கமாண்டர் உள்ளிட்ட தலிபான் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close