சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து நாங்கள் உரையாடினோம் - ஜீ ஜின்பிங்!!

  அபிநயா   | Last Modified : 12 Oct, 2019 03:31 pm
we-spoke-about-lot-of-interesting-things-xi-jinping

நேற்று இந்தியா வந்தடைந்து, பல்லவ கால துறைமுக நகரமான மாமல்லபுரத்தை பார்வையிட்ட சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது இந்திய பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, பிரதமர் மோடியுடன் இருநாடுகளின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினார்.

வெள்ளிகிழமையான நேற்று, இந்தியாவின் மாமல்லபுரத்திற்கு வந்தடைந்த சீன அதிபர் ஜின்பிங், அங்குள்ள கோவில்களையும், சிற்பங்களையும் பார்வையிட்டு, இந்திய கலாச்சாரத்தை உணர்த்தும் விதமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார். அதை தொடர்ந்து, இரவு உணவு உண்ண சென்று இரண்டு மணிநேரம் கடந்த நிலையிலும், இரு தலைவர்களும், சுவாரஸ்யமான பல விஷயங்களை குறித்தும் உரையாடிக் கொண்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. 

நேற்றைய நிகழ்வுகளை தொடர்ந்து, இன்று மீண்டும் சந்தித்த இரு தலைவர்களும், இந்தியா சீனா ஆகிய இருநாடுகள் குறித்து மட்டுமில்லாமல், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் விரிவாக உரையாடினர். 

பிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து சீன அதிபர் கூறுகையில், "நேற்று சுமார் ஐந்து மணிநேரம் ஒன்றாக இருந்ததால், ஏற்கனவே  எங்கள் இருவரின் இடையே இருந்து வந்த நட்பு இன்னும் வலுவாகியிருக்கிறது. நம் இரு நாடுகள் மட்டுமின்றி சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் விரிவாக உரையாடினோம். மேலும், உலக பிரச்சனை குறித்து மட்டுமில்லாமல், பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் நாங்கள் பேசினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close