கழிவறைக்குள் வைத்து மகளிடம் தவறாக நடந்துகொண்ட தாய்..!

  முத்து   | Last Modified : 20 Jan, 2020 11:17 am
badly-buried-her-daughter-in-the-toilet

அமெரிக்காவில் சிறார்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது பெற்றோர், ஆசிரியர், உறவினர் என யாராக இருந்தாலும் தண்டணை  கிடைக்கும். இந்நிலையில் லிண்டா கிப்சன் (38) என்ற பெண் தனது மகளை காலை நேரத்தில் பள்ளிக்கு அனுப்புவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென கோபத்தில் வெகுண்டெழுந்து மகளின் தலையை கழிப்பறை இருக்கையில் வைத்து முட்டினார்.

பின்னர் மகளின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு மிகவும் மோசமாக தாக்கினார். இந்த தாக்குதலால் சிறுமி அதிர்ச்சியடைந்தார். மேலும் அவரது கை உடைந்துள்ளதோடு உடலின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிசார் விண்டாவை கைது செய்தனர். மேலும் இவர் மீது பல்வேறு ரிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக விண்டா தனது மகளிடம் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close