கூகிள் மேப்ஸ் பேச்சைக் கேட்டு உறைந்த ஆற்றில் சிக்கிக்கொண்ட பயணி- அடுத்து நடந்தது என்ன..?

  சாரா   | Last Modified : 13 Feb, 2020 06:31 pm
man-falls-through-ice-on-mississippi-river-says-google-maps-told-him-to-cross

கூகிள் மேப்ஸை நம்பி உறைந்த ஆற்றில் சிக்கிக்கொண்ட ஒருவரை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றிய அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.மினிசோட்டா மாகாணத்திலுள்ள மினியாபோலீஸ் நகரில் அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மினியாபோலிஸ் ஆற்றை நடந்து சென்று கடப்பதற்கு ஒருவர் முயன்றுள்ளார்.

இரவு நேரம் என்பதால் அந்த நபர் கூகிள் மேப்ஸ் உதவியை நாடியுள்ளார். அந்த செயலியும் அவருக்கு வழிகாட்டியுள்ளது. கூகிள் மேப்ஸ் குரல் வழியாக தெரிவித்த கட்டளைகளை ஏற்றுக் கொண்டு ஆற்றை கட்டக் அந்த நபர் முயற்சித்துள்ளார்.அப்போது தான் அவருக்கு அந்த விபரீதம் தெரிய வந்தது. தான் உறைந்திருக்கும் ஒரு ஆற்றின் மீது நடந்து கொண்டிருப்பதை அவர் உணர்ந்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் உறைந்த பனிக்கட்டிகள் உடைந்துவிடும் என்கிற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது.

                                        

திடீரென எதிர்பாராத விதமாக பனிக்கடி உடைந்தன. இதனால் ஆற்றுக்குள் அந்த நபர் விழுந்துவிட்டார். கரையை ஓட்டிய பகுதியில் விழுந்ததால், அவர் கொஞ்சம் தப்பித்துக் கொள்ள முடிந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த நபர் மீட்கப்பட்டார். பிறகு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. உறைந்த ஆற்றின் மீது எதற்காக நடக்க வேண்டும்? என தீயணைப்புத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதற்கு அந்த நபர், கூகுள் மேப்ஸ் கட்டளையை ஏற்று ஆற்றை கடக்க முயன்றதாகவும். கூகிள் மேப்ஸ் சொன்னதை கேட்டு நடந்தால் ஆற்றுக்குல் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அந்த நபர் கூகிள் மேப்ஸ் மீது புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறினார்.அமெரிக்காவில் கூகிள் மேப்ஸ் செயல்பாடுகளை குறித்து அவ்வப்போது புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள செய்தித் தொடர்பாளர் ஒருவர், கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் சிறிய கோளாறுகள் இருக்கக் கூடும். ஆனால் மினிசோட்டாவில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகிலுள்ள பாலத்தை பயன்படுத்தவே கூகிள் மேப்ஸ் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் அவராகவே சென்று ஆற்றுக்குள் விழுந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

                                          

அண்மையில் கூகிள் பயன்பாட்டில் 15வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதற்காக ஐகான் மாற்றப்பட்ட, உலகளவில் பலரையும் கூகிள் நிறுவனம் தனது பிறந்தநாளில் பங்கெடுக்கச் செயதது. ஆனால், கூகிள் மேப்ஸ் சொதப்பலால் பிறந்தநாள் கொண்டாட்ட கலையை கூகிள் இழந்துவிட்டதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close