மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டு வெடிப்பு குற்றவாளி கைது

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நியூஜெர்சியில் உள்ள எலிசபெத் ரெயில் நிலையம் அருகே, மர்ம பொருள் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. உடனே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். வெடிகுண்டைச் செயலிழக்க செய்யும் ரோபோ மூலம் அந்தப் பையை சோதனையிடப்பட்டது. அப்போது அதில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து, அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்.பி.ஐ அமெரிக்காவின் மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டுவெடிப்பு குற்றவாளி அகமத் கான் ரகாமியின் புகைப்படத்தை வெளியிட்டது. இவர், ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்கக் குடிமகன் உரிமம் பெற்றவர். இந்நிலையில் அமெரிக்க போலீசார், லின்டென்னில் குற்றவாளி அகமத் கான் ரகாமியை கைது செய்து உள்ளனர். போலீஸ் பிடிக்க முயற்சித்தபோது அவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், இதில் ஒரு போலீசார் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close