ரஷ்யா பாராளுமன்ற தேர்தலில் புதின் கட்சி அமோக வெற்றி

  arun   | Last Modified : 20 Sep, 2016 11:39 am
ரஷ்ய பாராளுமன்றமான ‘டூமா’விற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த நிலையில் ஓட்டுப் பதிவு முடிந்த உடனேயே ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் இருந்தே அதிபர் புதின் ஆதரவு கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி பெருவாரியான தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. 93 சதவீத ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு இருந்தபோது, அக்கட்சிக்கு மட்டும் 54.3 சதவீத ஓட்டுகள் கிடைத்து இருந்தது. மேலும் பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையான 450–ல் 343 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றி சாதனை படைத்தது.எல்.டி.பி.ஆர். என்ற கட்சிக்கு 15.1 சதவீத ஓட்டுகளும், கம்யூனிஸ்டு கட்சிக்கு 14.9 சதவீத வாக்குகளும் கிடைத்தன. ஜஸ்ட் ரஷ்ய கட்சி 6.4 சதவீத ஓட்டுகளுடன் 4–வது இடத்தைப் பிடித்தது.புதின் ஆதரவு ஐக்கிய ரஷ்ய கட்சி அமோக வெற்றி பெற்று இருப்பதன் மூலம் 2018–ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் 63 வயது புதின் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close