இந்த இந்தியனை வெளியேற்று - பாகிஸ்தானின் காழ்ப்புணர்ச்சி

Last Modified : 20 Sep, 2016 09:54 am
ஐக்கிய நாடுகள் பொது சபையின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலர் ஐஜாஸ் அஹமத் சௌத்ரி ஆகியோர் நியூயார்க் சென்றுள்ளனர். அங்கு நேற்று ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது பாகிஸ்தான் வெளியுறவு செயலர் அஹமத் சௌத்ரி இந்திய பத்திரிக்கையாளரை நோக்கி "இஸ் இந்தியன் கோ நிகாலோ"(இந்த இந்தியனை வெளியேற்று) எனக் கூறியுள்ளார். அதேபோல் உரி தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்ப முயன்ற இந்திய பத்திரிக்கையாளர் ஒருவரை பாகிஸ்தான் பிரதமர் கை செய்கையால் தள்ளி போக சொல்லியுள்ளார். பாகிஸ்தானின் இந்த செயல் பெரும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளது. இதற்கு முன்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் சென்ற போது அங்கு இந்திய பத்திரிக்கையாளர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் நுழைய விடாமல் தடுத்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close