பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவில் தீர்மானம்

Last Modified : 21 Sep, 2016 10:38 pm
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண எம்.பி டெட் போ மற்றும் கலிபோர்னியா மாகாண எம்.பி டானா ரோஹ்ராபாச்சர் ஆகிய இருவரும் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிப்பதற்கான தீர்மானத்தை முன்வைத்துள்ளனர். இது குறித்து டெட் போ தெரிவிக்கையில், பாகிஸ்தான் நெடும்காலமாக தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் மட்டுமல்லாது இஸ்லாமாபாத் கூட ஒசாமா பின்லேடன் போன்ற பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல் படுகிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளது. பாகிஸ்தானின் இந்த செயலால் உலக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இதற்கான விலையை அதன் பக்கத்து நாடான இந்தியா கொடுத்து வருகிறது, எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தீர்மானம் குறித்து அமெரிக்க நிர்வாகம் 4 மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வ பதில் அளிக்க வேண்டும். மேலும் அமெரிக்க அதிபர் 90 நாட்களில் இதுகுறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். பின்னர் அமெரிக்க மாகாண செயலர் அதிபரின் அறிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தானை தீவிரவாத நாடா? இல்லையா? என்பதை அறிவிப்பார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close