சுனாமிப் பேரலை போல் மேகக்கூட்டம்: கனடாவில் பீதியை கிளப்பிய நிகழ்வு (வீடியோ)

  Padmapriya   | Last Modified : 13 Apr, 2018 07:14 pm

கனடாவில் சுனாமிப் பேரலை போல ஆக்ரோஷமாக மேகம் இறங்கி வந்த நிகழ்வு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

கனடாவின் லெவிட் உள்ள லெட்விட் என்ற மாகாணத்தில் உள்ளது ஆல்பர்ட்டா என்ற இடம். இங்கு நேற்று திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. கூடவே சிறிய அளவிலான மேகக்கூட்டம் தரையில் இறங்கி வந்தது. சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக ராட்சத மேகங்கள் திரண்டு சுனாமி பேரலை போல் தரைப்பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்தன. இதனைக் கண்ட அங்கிருந்தோர் பதறியடித்து ஓடினர். 

சயானா ஆல்சன் என்பவர் அந்த நிகழ்வை வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். மிகவும் அரிதான இந்த வானிலை நிகழ்வின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


ராட்சத மேகங்கள் பல நிமிடங்கள் நீடித்ததாம். மிகவும் விநோதமான இந்த  நிகழ்வு குறித்து ஆய்வாளர்கள் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அங்கு தொடங்க இருக்கும் வசந்த காலத்தின் அறிகுறி தான் இந்த நிகழ்வு என்று கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close