ட்ரம்ப்புக்கு பதிலடி: அமெரிக்க பொருட்கள் மீது புதிய வரி விதித்தது கனடா

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 03:54 am
canada-replies-back-on-trump-s-tariffs-with-its-own

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது புதிய வரி விதித்ததற்கு பதிலடி கொடுக்குமாறு, அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

சீனா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் அதிக அளவு எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், அமெரிக்க பொருட்களின் மதிப்பு குறைந்து வருவதாக குற்றம் சாட்டி, அவற்றின் இறக்குமதி மீது புதிய வரிகளை விதித்தார் ட்ரம்ப். இது அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோவிடம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. மேலும், அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஆகிய வடஅமெரிக்க நாடுகளுக்கு இடையே உள்ள நாஃப்டா என்ற வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றியமைக்க ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். 

இதற்கு அமெரிக்க தரப்பில் இருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அந்த ஒப்பந்தத்தை பற்றி ஆலோசனை நடத்த ட்ரூடோ ட்ரம்ப்பை சந்திப்பதாக இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன், 5 ஆண்டுகளில் அந்த ஒப்பந்தம் தானாக ரத்தாக வேண்டும் என ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இது கனடாவுக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் பேச்சுவார்த்தையில் பலனில்லை, என ட்ரூடோ கூறியுள்ளார். நாஃப்டா பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததை தொடர்ந்து, பொறுத்தது போதும் என ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு பதிலடியாக புதிய வரிகளையும் ட்ரூடோ விதித்துள்ளார். 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தயிர், காபி, சர்க்கரை, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் மீது சுமார் ரூ.85 கோடி அளவுக்கு புதிய வரிகளை விதித்துள்ளது கனடா அரசு. ஜூலை 1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close